Sunday, 18 May 2008

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவத்திற்காக இலங்கை-பாகிஸ்தானிடையே போட்டி ஜெயிக்கப்பொவது யாரு??

எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவத்திற்கான தேர்தலில், ஆசிய நாடுகளுக்கான நான்கு இடங்களில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் கடும் போட்டி நிலவும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமைகள் பேரவையில்; அங்கத்துவத்திற்காகப் போட்டியிடும் ஆறு நாடுகளில் பஹ்ரைன், கிழக்கு திமோர் ஆகிய நாடுகளின் இடங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே இலங்கையும், பாகிஸ்தானும் போட்டியிடுவதாக வேறு சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கை பாகிஸ்தானுடன் போட்டியிடுமானால், தெற்காசியாவில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான இருதரப்பு உறவில் பாதிப்புகள் எற்படலாம் எனவும் சில இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்ககுமிடையில் அண்மைக்காலமாக வலுவடைந்து வரும் இராஜதந்திர உறவுகளில் இந்தப் போட்டி பாதிப்பினை உண்டுபண்ணலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய அமைச்சர்களின் செயற்குழுக் கூட்டத்தில், பொதுநலவாய நாடுகளின் அங்கத்துவத்திலிருந்து ஆறு மாத காலம் இடைநிறுத்தத்துக்குப் பின்னர் மீண்டும் பாகிஸ்தானை சேர்த்துக் கொள்வதற்கான ஆதரவை இலங்கை உறுதியாக வெளிப்படுத்தியிருந்தது.

கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக பொதுநலவாய நாடுகளிலிருந்து பாகிஸ்தானை இடைநிறுத்தியமைக்கு எதிராக இலங்கை மேற்கொண்ட இறுதிக் கட்ட முன்னெடுப்பாக இது கருதப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஆசிய நாடுகளுக்கான நான்கு உறுப்புரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பஹ்ரைன், கிழக்கு திமோர், ஜப்பான், பாகிஸ்தான், தென்கொரியா, மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகள் போட்டியிடுகின்றன.

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு இடம்கிடைப்பது உறுதியானது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

1 comment:

ttpian said...

this is a high level drama!
during the eleventh hour,either pakisthan or srilanka may withdraw frpm the contest-similar way it will help each other!