Saturday, 17 May 2008

மட்டக்களப்பு டிப்போ பயணிகள் பஸ் சாய்ந்தமருதில் மறிக்கப்பட்டு தாக்குதல்

அம்பாறை சாய்ந்தமருது பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு டிப்போவுக்குச் சொந்தமான பயணிகள் பஸ் தாக்குதலுக்கிலக்காகியுள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸே சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக நேற்றுக் காலை இனந்தெரியாத கோஷ்டியொன்றினால் வழிமறிக்கப்பட்டு தாக்குதலுக்கிலக்கானது.

முகத்தை கறுப்புத் துணிகளால் மூடிக்கட்டியவாறு பஸ்ஸினுள் ஏறியவர்கள் பஸ் கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர். இதனால் பஸ் சாரதிக்கு சிறு காயமேற்பட்டது.

பயணிகள் எவரும் துன்புறுத்தப்படாத போது பஸ்ஸுக்கு சுமார் 75,000 ஆயிரம் ரூபா சேதமேற்பட்டுள்ளது.

இது குறித்து பின்னர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

No comments: