Saturday, 17 May 2008

ISOORYA CRIME WATCH-17.05.20008

கொழும்பு பலம்பலப்பிட்டியில் தமிழர் ஒருவர் கடத்தல்

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை தமிழர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த வீரகுட்டி சுந்தரலிங்கம் என்பவதே அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளதாக பம்பலபிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்டவர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் சாரதி எனவும், அவர் தனது அலுவலகப் பணிகளுக்காக கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள தங்ககம் ஒன்றில் தங்கியிருந்தார் என காவல்துறையினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கடத்தப்பட்டவர் தொடர்பான விசாரணைகளை பம்பலப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பஹாவில் தேடுதல் நடவடிக்கை 41 பேர் கைது
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது 41 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் தமிழர்களும், மூன்று சிங்களவர்களும், இரண்டு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர். அத்துடன் பிடியானை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த 32 பேரும் இவர்களில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாத்தறைப் பகுதியில் இரு முஸ்லீம்கள் கைது

புதன்கிழமை இரவு மாத்தறை காவல்துறையினரால் கிழக்கு மாகாணம் சம்பாந்துறையை சேர்ந்த இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இவர்கள் இருவரும் கைதுசெய்யப்படும்போது மாத்தறைநகரில் உணவுக்கடையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாத்தறையில் பலகாலமாக பணியாற்றியபோது சரளமாக சிங்களம் பேசமுடியாதவர்கள் எனவும் தெரியவருகிறது.

புலத்சிங்கள பகுதியில் ஒருவர் குத்திக்கொலை

புலத்சிங்கள,கொபகஹ பகுதியில் ஆணொருவர் கூரிய ஆயுதமொன்றினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு 9 மணியளவிலேயே இச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட தகராறே இச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாமென சந்தேகம் தெரிவித்திருக்கும் பொலிஸார், சம்பவம் தொடர்பில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

No comments: