
முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் மருத்துவமனை மீது சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கண்டி வீதிக்கு கிழக்காக உள்ள மாந்தை கிழக்குப் பகுதியில் உள்ள நட்டாங்கண்டல் மருத்துவமனையின் மீதே படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.
இத்தாக்குதலில் மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு, மகப்பேற்று விடுதி என்பன பலத்த சேதமடைந்தள்ளன.
போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிறிலங்காப் படையினர் மாந்தை கிழக்கு மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது.

No comments:
Post a Comment