Friday, 9 May 2008

கொழும்பு துறைமுகம் ஊடாக U.A.E கடத்தப்படவிருந்த சிகப்பு சந்தன மர குற்றிகளை சுங்க திணைக்களத்தின் மத்திய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகம் ஊடாக ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு கடத்தப்படவிருந்த சிகப்பு சந்தன மர குற்றிகளை சுங்க திணைக்களத்தின் மத்திய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

14 ஆயிரம் கிலோ கிராம் எடை கொண்ட இந்த சந்தன குற்றிகள் துபாய்க்கு கடத்தப்படவிருந்தாகவும் இதன் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரும்பு என கூறப்பட்டு, கொள்கலன் ஒன்றில் இந்த சந்த குற்றிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பா இந்திய சுங்க அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இந்த சந்தன மர குற்றிகள் அரசுடமையாக்கப்பட்டதாக உதவி சுங்க பணிப்பாளர் தெரிவித்தார்.

No comments: