Friday, 9 May 2008

உயிருக்கஞ்சி நீதிமன்றில் குடும்பத்துடன் சரணடைவு

யாழ்ப்பாணத்தில் நேற்றும் இருவர் உயிருக்கஞ்சி சரணடைந்துள்ளனர். மயிலட்டிப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து அளவெட்டிப்பகுதியில் வசித்துவந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய விவசாயி ஒருவர் தமது மூன்று பிள்ளைகளுடனும் தமது மனைவியுடனும் மல்லாகம் நீதிமன்றில் சரணடைய முற்பட்டுள்ளார்.

இதன்போது மூன்று பிள்ளைகளையும் தாயையும் உறவினர் வீடுகளில் பாதுகாப்பாக தங்குமாறு ஆலோசனை கூறிய மல்லாகம் நீதவான் சறோஜினி இளங்கோவன் குடும்பத்தலைவரை மட்டும் பொலிஸ் நிலையத்திற்கு செல்லாமல் நீதிமன்ற பாதுகாப்பில் யாழ் சிறைச்சாலையில் தங்கவைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை புலோலி மேற்கு பருத்தித்துறையைச் சேர்ந்த 61 வயதுடைய ஆறுமுகம் முருகேசு என்பவர் படையினரது கொலை அச்சுறுத்தல் காரணமாக யாழ்மனிதஉரிமை ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளார்.

No comments: