Friday, 9 May 2008

மூதூரில் சிறீலங்கா கடற்படையின் துருப்புக்காவிக் கப்பல் விடுதலைப் புலிளால் மூழ்கடிப்பு

சிறீலங்கா கடற்படைக்குச் சொந்தமான துருப்புக்காவியான ஏ-520 கப்பல் ஒன்று விடுதலைகளின் கடற்கரும்புலி அணியின் நீரடி நீச்சல் சிறப்புப் பிரிவினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை 2.23 மணியளவில் திருகோணமலை மூதூரில் அமைந்துள்ள அஸ்ரப் இறங்குதுறையில் கடற்புலிகளின் கங்கைஅமரன் சிறப்புப் படையணி இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்கியழிக்கப்பட்ட கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் துறைமுகத்திற்கும் இடைய சிறீலங்காப் படையினரையும் ஏற்றிச் செல்லவும் சிறீலங்காப் படையினருக்கான விநியோகத்தை இதுவரைகாலம் மேற்கொண்டுள்ளது.

தாக்கிய அழிக்கப்பட்டுள்ள ஏ-520 துருப்புக்காவிக் கப்பல் யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்து இருக்கும் சிறீலங்காப் படையினருக்கு, வெடி பொருட்களை ஏற்றியிருந்த நிலையில் இக்கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

2003ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த 264 பேரை சட்டவிரோதமாக ஏற்றிக்கொண்டு இத்தாலி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், தங்காலை கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினர் இந்த கப்பலை கைப்பற்றினர்.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவொன்றின் பேரில் இலங்கை கடற்படையினருக்கு வழங்கப்பட்ட இந்தக் கப்பல் கடந்த காலங்களில் இராணுவத்தினரின் ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்த வந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments: