அதி சக்தி வாய்ந்த வெடிமருந்துப் பொருட்கள் உட்பட ஏராளமான யுத்த ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்தது தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன முன்னாள் இயக்குநர் உட்பட மேலும் மூன்று சந்தேக நபர்களும் எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் திகதி வரை மேலதிக விசாரணைகளுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புலிச் சந்தேக நபர்களான ஸ்டென்லொஸ், நோமர் கண்ணன், கனகசபை தேவதாசன், பரமஜோதி சத்தியசீலன், கமலணி கிருஷாந்தி ரெஜினோல்ட் ஆகியோர் சீ4 ரக அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துப் பொருட்கள், 6 கைக்குண்டுகள் 8 டெட்டனேட்டர்கள் உட்பட மேலும் பல குண்டு வகைகள் வைத்திருந்ததாக ஏற்கனவே பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்தது.
பாமன்கடையில் வசித்துவந்த முதலாவது சந்தேக நபரான ஸ்டென்லொஸ் முதலில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, அவர் 1999ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டு வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் கரும்புலி உறுப்பினராக பயிற்சியை பெற்றவர் எனவும் பொட்டு அம்மானால் தற்கொலைப்படைக்கு நியமிக்கப்பட்டவரெனவும் கொழும்பில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ள அனுப்பப்பட்டவரெனவும் தெரியவந்தது.
முதலாவது சந்தேக நபர் வழங்கிய தகவலைத் தொடர்ந்தே இரண்டாவது சந்தேக நபரான கனகசபை தேவதாசன் கொட்டாஞ்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டதுடன் அதன் மூலம் மூன்றாவது சந்தேக நபரான பரமஜோதி சத்தியசீலன் புலிகள் இயக்க உறுப்பினர் என்பது தெரியவந்ததாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் அறிய முடிகிறது.
அத்துடன் நான்காவது சந்தேக நபரான கமலனி கிருஷ்õந்தி முதலாவது சந்தேக நபருக்கு தங்குவதற்கான இடவசதியை செய்து கொடுத்ததன் பேரில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(லங்காதீப 04.07.2008)
Friday, 4 July 2008
புலிச்சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து தடுப்புக்காவல்-(லங்காதீப 04.07.2008)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment