Thursday, 24 July 2008

ஜப்பானில் நிலநடுக்கம்: 110 பேர் படுகாயம்

ஜப்பானின் மத்திய வடக்குப் பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 32 கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன் 110 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.

ஜப்பானின் இஷினோசிகி மலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்படும் அதேவேளை, இந்த நிலநடுக்கம் 40 வினாடிகள் வரை நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக அப்பகுதியில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டமையால்; ரயில் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியிருக்கக்கூடுமெனவும், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு ரோக்கியாவிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஹாசிநோகே எனும் இடத்திலுள்ள ஒரு கட்டடத்தில் எரிவாயுக் குழாய்கள் உடைந்து தீ விபத்து ஏற்பட்டதுடன், மேலும் இந்தப் பகுதியில் 30 க்கும் அதிகமான கட்டடங்களும் இடிந்துள்ளன.

No comments: