Thursday, 10 July 2008

நவாலி தேவாலய படுகொலைகள் 13 வது நினைவுநாள் அனுஸ்டிப்பு

நவாலி தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளில் 13 வது நினைவுத்தினம் நேற்று நவாலி சென் பீட்டர்ஸ் தேவாலயம், மற்றும் நவாலி சின்னக்கதிர்காம முருகன் கோயில் ஆகியவற்றில் நினைவுக்கூறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

நவாலி தேவாலயம் மீது இலங்கை வான்படை 1995 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி குண்டு வீசியதில் 147 பேர் பலியாகினர்.சுமார் 360 பேர் காயமடைந்தனர்.

இதன்போது பல்வேறு உதவு நிறுவனங்களை சேர்ந்த 40 தொண்டர்களும் நவாலி வடக்கு கிராமசேவையாளர், ஹேமலதா செல்வராஜா, சில்லாலை கிராமசேவையாளர் பிலிப்புபிள்ளை சவேரியார்பிள்ளை ஆகியோர் ஆபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கியிருந்தனர்.

No comments: