இரான் மேலும் பல ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ள தாக வந்துள்ள செய்திகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இரான் நாட்டை வேவுபாக்கக் கூடிய திறன்கொண்ட விமானம் என்று தாம் கூறும் விமானத்தைப் பற்றிய மேலதிக தகவல்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
இடாம் வேவு விமானத்தில் அதி நவீன நுண்ணறிவு சேகரிப்பு சாதனங்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. முன்னதாக இரானின் ரெவல்யூஷ்னரி கார்ட்ஸ் பிரிவினர் மேலும் சில ஏவுகணைகளை வளைகுடாப் பகுதியில் ஏவியுள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இரான் புதன்கிழமையன்றும் ஏவுகணைகளை சோதித்துள்ள நிலையில், இச்சோதனைகள் நடந்துள்ளன. இதனிடையே அமெரிக்கா தனது கூட்டாளிகளை இரானின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் என்று அமெரிக்க அரசுச் செயலர் காண்டலீசா ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment