Wednesday, 23 July 2008

புலிகளின் தாக்குதல்களில் மூன்று படையினர் பலி- 13 பேர் காயம்

புதன்கிழமை, 23 யூலை 2008
மன்னார், வவுனியா, மணலாறு, யாழ்ப்பாண களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் சிறிலங்காப் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் சிறிலங்காப் படைத்தரப்பு வெளியிட்ட விவரம்:

யாழ். முகமாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதிவெடிகளில் சிக்கி சிறிலங்காப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர்.

மன்னார்

மன்னார் பேம்பியோடையில் நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் இடம்பெற்றற தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மன்னார் முருங்கையடிப்பிட்டிப் பகுதியில் நேற்று பிற்பகல் 2:20 மணியளவில் விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதே பகுதியில் நேற்று பிற்பகல் 1:40 மணிக்கும் இரவு 7:45 மணிக்கும் விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் இரு படையினர் காயமடைந்துள்ளனர்..

நேற்று பிற்பகல் 5:00 மணியளவில் இடம்பெற்ற பிறிதொரு தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

வவுனியா

வவுனியா பாலமோட்டைப் பகுதியில் நேற்று பிற்பகல் 2:45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 1:20 மணியளவில் இடம்பெற்ற பிறிதொரு தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

மீண்டும் நேற்று பிற்பகல் 3:20 மணியளவில் விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

மூன்றுமுறிப்புப் பகுதியில் 12:40 மணியளவில் இடம்பெற்ற தாக்குததலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

மணலாறு

ஜனகபுர வடக்குப்பகுதியில் நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதே பகுதியில் நேற்று பிற்பகல் 2:20 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

கிரிபன்வேவப் பகுதியில் நேற்று முற்பகல் 11:45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

No comments: