கோவில் திருவிழாவில் வேல் காவடி எடுத்து விட்டு திரும்பிய வாலிபர், ஆட்டோ கவிழ்ந்ததில் உடலில் ஏராளமான வேல்கள் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கொருக்குப்பேட்டை ஜமால் சவுக்கார் தெருவை சேர்ந்தவர் தீனன் (வயது 42). இவர் வண்ணாரப்பேட்டை பகுதியில் பம்ப் ஸ்டவ் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், லதா (15), பிரபு (12) என்ற பிள்ளைகளும் உள்ளனர்.
தீனன் தீவிர கடவுள் பக்தர் ஆவார். இவர் அம்மன் கோவில் திருவிழாக்களில் உடலில் வேல், அலகு குத்தி காவடி எடுத்து வருவது வழக்கம். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.
அந்த விழாவில் காவடி எடுப்பதற்காக தீனன், தனது நண்பர்கள் வேலு, நந்தகுமார், வரதன், ராஜேந்திரன், ஜோதி ஆகியோருடன் ஷேர் ஆட்டோவில் நேற்றுமுன்தினம் சென்றார். அங்கு சென்றதும் காவடி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினார்.
பின்னர் தீனன், காவடியில் இருந்த வேல் கம்புகளை தனியாக எடுத்து ஆட்டோவின் பின்னால் வைத்துக் கொண்டு, சென்னைக்கு புறப்பட்டார். விழுப்புரம் அருகே கூட்டேரிப்பட்டு மெயின்ரோட்டில் ஆட்டோ வரும்போது ரோட்டில் கொட்டி வைக்கப்பட்டு இருந்த ஜல்லிகற்கள் மீது திடீரென ஏறி இறங்கியது.
இதில் ஆட்டோ நிலைதடுமாறி ரோட்டில் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணம் செய்த தீனனின் உடலில், தனியாக கட்டி வைக்கப்பட்டு இருந்த வேல் கம்புகள் தாறுமாறாக குத்தின. வயிறு, மார்பு, கழுத்து, முகம் என பல இடங்களில் குத்தி துளைத்தன.
இதில் தீனன் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவருடன் சென்ற அவரது நண்பர்கள் வேலு, பரதன், நந்தகுமார், ஜோதி, ஆட்டோ டிரைவர் ராஜேந்திரன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Wednesday, 23 July 2008
ஏராளமான வேல்கள் உடலில் பாய்ந்து வாலிபர் சாவு வேல் காவடி எடுத்து திரும்பிய போது ஆட்டோ கவிழ்ந்த பரிதாபம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment