Friday, 25 July 2008

வவுனியா மோதல்களில் 13 படையினர் பலி தாக்குதல்கள் தொடர்கிறது புலிகள் அறிவிப்பு

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை குஞ்சுக்குளம், நவ்வி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் 13 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

பாலமோட்டை குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5:20 மணியளவில் சிறிலங்காப் படையினர் முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டனர்.

இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

இதில் நேற்று ஒன்பது சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

நவ்விப்பகுதியில் இன்று இடம்பெற்ற மோதலில் நான்கு படையினர் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் மிதிவெடி மற்றும் பொறிவெடிகளிலும் படையினர் சிக்கியுள்னர்.

இதில் ஏற்பட்ட இழப்பு விவரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

No comments: