மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளராகத் தென்ஆபிரிக்காவின் நவநீதம்பிள்ளை பெரும்பாலும் எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்படக்கூடும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளராகக் கடமையாற்றிய லூயிஸ் ஆர்பரின் அர்ப்பணிப்புப் பாராட்டுக்குரியதென அவர் பொதுச்சபையில் குறிப்பிட்டுள்ளார்.
உறுப்பு நாடுகள் மற்றும் அரச சர்பற்ற நிறுவனங்களின் ஆலோசனையின்படி இந்த நியமனம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பாதுகாப்பு ஐக்கிய நாடுகள் அமைப்பின் முதன்மை நோக்கங்களில் ஒன்றெனவும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான காத்திரமான செயற்பாடுகளை மேற்கொள்ள புதிய ஆணையாளருக்குப் பூரண சுதந்திரம் வழங்கப்படும் எனவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தென்ஆபிரிக்காவின் முன்னாள் நீதவான் நவநீதம்பிள்ளை கடமைகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
நவநீதம்பிள்ளை மனித உரிமைகள் மற்றும் சட்ட விவகாரங்களில் மிகவும் முனைப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2003ம் ஆண்டு முதல் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றின் நீதவானாக நவநீதம்பிள்ளை கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, 25 July 2008
மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆளுனராக நவநீதம்பிள்ளை எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்படலாம் - பான் கீ மூன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment