Wednesday, 9 July 2008

வடக்கில் 16ஆயிரம் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன- சிவசக்தி ஆனந்தன்

வடபகுதியிலுள்ள 16 ஆயிரம் தொலைபேசி இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் ஏனைய பகுதி மக்களுடன் தொடர்புகொள்ளமுடியாமல் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

யாழ் குடாநாட்டில் 7 ஆயிரம் நிலையான தொலைபேசித் தொடர்புகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆயிரம் தொலைபேசிகளும், வன்னியில் 4 ஆயிரம் தொலைபேசிகளும் பாதுகாப்பைக் காரணம்காட்டி அரசாங்கத்தால் துண்டிக்கப்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.

“வடபகுதியிலுள்ள மக்களின் தொடர்பாடல் உரிமை மறுக்கப்பட்டிருப்பதுடன், அங்குள்ள மக்கள் வெளிமாவட்டங்களிலிருக்கும் தமது உறவினர்களுடன்கூடத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார் அவர்.

நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களும், அரசாங்க அதிகாரிகளும் வன்னியில் தமது பணிகளை முன்னெடுக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது என சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தால் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வடபகுதியிலுள்ள மக்களை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்கிறது எனக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர், நிலங்களைக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்தியிருக்கும் அரசாங்கம் மக்களின் உரிமைகள் குறித்துக் கவனம் செலுத்தவில்லையெனக் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், விடுதலைப் புலிகளை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு இலங்கை அரசாங்கம் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்

No comments: