அண்மைக்காலங்களில் சிறி லங்கா காவற்துறை தடுப்புக்காவல் நிலையங்களில் 16 பேர் வரை பலியாகியுள்ளதாக ஆணித்தரமான தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கபண்டார இதனைத்தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு கருத்து தெரிவிக்கையில், அவசரகாலச்சட்டம், மற்றும் பயங்கரவாச்சட்டங்கள் போன்ற சட்டங்கள் பொதுமக்களின் உரிமைகளை பாதிக்காதவகையில் முன்னெடுக்கப்படவேணடும் எனவும் குறிப்பிட்டார்.
அண்மைக்காலங்களில், 28,618 பாரிய குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும். கடந்த ஜனவரிமாதம் 31அம் திகதிமுதல் ஜூன் மாதம் 30ஆம் திகதிவரை 917 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்ததுடன், அவசர கால சட்டத்தின்மூலம் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளதா? எனவும் கௌ;வி எழுப்பியுள்ளார்.

No comments:
Post a Comment