ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இராணுவத்தளபதியின் கீழ் இயங்கும் குழு ஒன்று செயற்படுமாயின் அது தொடர்பிலான தகவல்களை பெயர் முகவரியுடன் வெளியிடுமாறு ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஸன யாப்பா,
இன்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (யூலை8) நாடாளுமன்றத்தில் சிறப்பு உரையொன்றை ஆற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னனியில் இராணுவத் தளபதியின் கீழ் இயங்கும் குழுவொன்று சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தியிருந்தார்.
சிறப்புரிமைகளுக்காக பொய்யான பிரசாரங்களை செய்ய வேண்டாம் என ஊடகத்துறை அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். வெளிநாடுகளில் பாதுகாப்பை பெறுவதற்கான ஊடகவியலாளர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படும் கதை என்று ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்களை அரசாங்கம் தளர்வான போக்குடன் அணுகாது எனவும் பொய்யான சம்பவங்களும் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment