Wednesday, 9 July 2008

தொழிற்சாங்கப் போராட்டத்துடன் புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் தொடர்பு – கெஹலிய

பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பி.யினருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தெற்கில் விடுதலைப் புலிகள் அழிவுகளை ஏற்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென அவர் குறிப்பிட்டுள்ளார். தேசியப் பாதுகாப்பு மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

17ஆவது திருத்தத்தை அமுல்படுத்தல், மாகாணசபை தேர்தல்களை ரத்து செய்தல் மற்றும் அமைச்சரவை எண்ணிக்கையை 35 ஆக குறைத்தல் ஆகிய கோரிக்கைகள் தொழிற்சங்க கோரிக்கைகளாக கருத முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கு இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஓர் பாரிய தடையாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தொழிற்சங்கப் போராட்டத்துடன் ஜே.வி.பி.யினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடியாக தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.

No comments: