மன்னார் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (யூலை3) இலங்கைப் படையினரின் சிறப்பு அணியினர் மேற்கொண்ட சிறப்புப் படை நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாக ‘லக்பிம’ வின் ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (யூலை3) மாலை இராணுவத்தின் இரண்டாவது கொமோண்டோ றெஜிமென்டைச் நேர்ந்த 3 குழுக்கள் மன்னாரின் வடமேற்கு கரையோரம் உள்ள விடத்தல்தீவு பகுதிக்குள் உள்நுழைய முற்பட்டிருந்தனர்.
இந்தக் குழுவில் காட்டுப்புற சமருக்கு என சிறப்பு பயிற்சி பெற்ற பல கொமோண்டோக்கள் அடங்கியிருந்தனர். மிகவும் அதிகளவு ஆயுதங்களை சுமந்தவாறு நகர்ந்த இந்த அணிஇ விடுதலைப் புலிகளின் பகுங்கு குழிகளை அண்மித்த போது மோதல்கள் வெடித்திருந்தன.
தலா நான்கு பேர் கொண்ட இந்த மூன்று அணிகளுக்கு சார்ஜன் அசித குமாரஇ கோப்ரல் வணசிங்கஇ லயன்ஸ் கோப்ரல் இந்திக குமார ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர்.
மோதல்கள் மிகவும் உக்கிர நிலையை அடைந்த போது வான் தாக்குதல் உதவிகளை இந்த அணி கோரியிருந்தது. அதனைத் தொடர்ந்து எம்ஐ-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளும் தாக்குதலில் இணைந்து கொண்டன. மோதல்கள் தொடர்ந்தன.
விடுதலைப் புலிகளின் பதுங்குகுழியை அண்மித்த சார்ஜன் குமார ஆர்பிஜி தாக்குதலில் சிக்கி கொண்டார். அதனைத் தொடர்ந்து கோப்ரல் வணசிங்கவும் காயமடைந்ததுடன்இ பின்னர் மரணத்தை தழுவியிருந்தார்.
12 பேர் கொண்ட இந்த அணியினர் ஆரம்பித்த மோதல்கள் 5 மணி நேரம் நீடித்தன.
இதனைத் தொடர்ந்து இராணுவம் மீட்பு அணி ஒன்றை அனுப்பியது. இந்த அணியினருக்கு லெப். கொல்லுரை தலைமை தாங்கியிருந்தார்.
எனினும் விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதலில் சிக்கி கொல்லுரையும் காயமடைந்திருந்தார்.
தமது தரப்பில் இழப்புக்கள் அதிகமாகி வருவதை உணர்ந்த லயன்ஸ் கோப்ரல் இந்திக குமார பின்வாங்கி தப்பிச் செல்வதற்கு தீர்மானித்ததுடன்இ எஞ்சிய கொமோண்டோக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கி சென்றிருந்தார்.
இராணுவம் மேற்கொண்ட இந்த கொமோண்டோ தாக்குதல் தோல்வியில் முடிவடைந்ததில் 12 பேர் கொண்ட அந்த அணியையும்இ அவர்களுக்கு உதவிக்கு விரைந்த அணிகளையும் சேர்ந்த இரு கொமோண்டோக்கள் கொல்லப்பட்டதுடன்இ இருவர் காணாமல் போயிருந்தனர்.
மேலும் 10 பேர் படுகாயமடைந்திருந்தனர். மன்னாரின் நெல்விளையும் பிரதேசத்தை கடந்த வாரம் தாம் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் இராணுவம் 170-க்கும் அதிகமானோரை இழந்துள்ளதாக லக்பிமவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:
wait for some more time-from 170,it will be not less than 30,000!
Mahindha will beg for a ceasefire!
Post a Comment