இலங்கையின் சனத்தொகையில் 19 வீதமானோர் மாத்திரமே வங்கிகளில் பணத்தினை சேமிப்பதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்
அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவானதொரு வீதம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்காரணமாக, மக்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு மில்லியன் சேமிப்புக் கணக்குகளை இந்த வருடம் ஆரம்பிக்கத்திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தில் இலங்கை தங்கியிருப்பதன் மூலமே பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் இலங்கை வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உணவு இறக்குமதிக்கும், உள்நாட்டு யுத்தத்திற்கும் பெருந்தொகை நிதி செலவிடப்படுவதே நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி மூலம் நாட்டிற்குக் கிடைக்கும் வருமானத்தில் 46 வீதம் உணவுக்காகச் செலவிடப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள காமினி விக்ரமசிங்க, விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலமே பணவீக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தினை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment