கொழும்பின் புறநகர் பகுதியான முல்லேரியா அம்பத்தள வீதியில் அம்பலம பகுதியில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் முச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டோர் தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment