வெள்ளிக்கிழமை, 03 யூலை 2008
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 30-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். படையினரின் 2 உடலங்களும் படைப்பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறியுள்ளதாவது:
மன்னார் - சன்னார் பகுதிக்கும் கொடிகட்டிய ஆற்றுப்பகுதிக்கும் இடையில் உள்ள பகுதி ஊடாக நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் சிறிலங்கா வான்படையின் எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகளின் பீரங்கித்தாக்குதல்கள், செறிவான எறிகணை மற்றும் வெடிகணைச் சூட்டாதரவுடன் படையினர் பெருமெடுப்பிலான முன்நகர்வை மேற்கொண்டனர்.
இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத்தாக்குதலை நடத்தினர்.
இதில் மாலை 6:00 மணிவரை இடம்பெற்ற தீவிர தாக்குதலையடுத்து படையினரின் முன்நகர்வு முறியடிக்கப்பட்டது.
இம் முறியடிப்பில் 15 படையினர் கொல்லப்பட்டனர். 30-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்தனர்.
கொல்லப்பட்ட 2 படையினரின் உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட படைப்பொருட்கள் விபரம்:
ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 02
லோ - 01
நடுத்தர ரவைகள் - 2,000
ஏ.கே.எல். எம்ஜி ரவைகள் 1,000
ஏகே ரவைக்கூடுகள் - 38
தொலைத்தொடர்பு கருவி - 01
தொலைநோக்கி - 01
கிற்பாக் - 01
தலைக்கவசங்கள் - 04
குண்டுதுளைக்காத அங்கிகள் - 02
ஜெக்கற் கோள்சர் - 01
தண்ணீர் கொள்கலன்கள் - 10
திசைகாட்டி - 01
சாக்குத் தொப்பி - 01
குண்டு -01
உட்பட மேலும் பல படைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
உடலங்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக சிறிலங்காப் படையினரிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகளை விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வருகின்றனர் என்றார் அவர்.

No comments:
Post a Comment