Wednesday, 9 July 2008

தோல்வியடைந்த நாடுகளில் இலங்கை 20 வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது


கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் தோல்வியடைந்த நாடுகள் வரிசையில் 25 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்த இலங்கை இந்த வருடத்தில் 20 ஆவது இடத்தில் தரப்படு;த்தப்பட்டுள்ளது.

சுமார் 12 குறியீடுகளை மையமாகக்கொண்டு அமரிக்காவில் உள்ள புத்திஜீவிகள் இந்த தரப்பட்டியலை தயாரித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் இலங்கையில் குறித்த 12 குறிக்காட்டிகளிலும் தாழ்ந்த மட்ட தரத்தையே கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை காப்புகள், ஜனநாயகம் உட்பட்ட 12 குறிகாட்டிகளே அவையாகும்..இதில் இலங்கை அகதிகள் விடயத்தில் ஐந்தாவது என்ற மோசமான நிலையையும், பாதுகாப்பு என்ற விடயத்தில் 8 வது என்ற இடத்தையும் பெற்றுள்ளது.

இதனடிப்படையி;ல் சூடானுக்கு அடுத்தப்படியான தோல்வி அடைந்த நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: