வெற்றியும் இன்றி, தோல்வியும் இன்றி, முடக்கநிலையை யுத்தம்
அடைந்திருப்பதாக, இக்பால் அத்தாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஊடகச் செவ்வியை வழங்கியிருக்கும்,
தென்னிலங்கையின் முன்னணி படைத்துறை ஆய்வாளர் இக்பால்
அத்தாஸ், யுத்தத்தை சிறீலங்கா அரசாங்கம் முடிவுக்கு கொண்டு
வரும் வரை, அதனால் ஏற்படும் சுமைகள் தம்மையே பாதிக்கும்
என்ற எண்ணம், நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை ஆகிய கிழக்கு
மாவட்டங்களிலும், யாழ் குடாநாட்டிலும், தமிழீழ விடுதலைப்
புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்து வரும்
அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் படை வலிமை தக்க
வைக்கப்பட்டிருப்பதாகவும், இக்பால் அத்தாஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்வாறான பின்புலத்தில், வெற்றியும் இன்றி, தோல்வியும் இன்றி,
முடக்கநிலையை யுத்தம் அடைந்திருப்பதாகவே தற்பொழுது கருத
முடியும் என்றும், இக்பால் அத்தாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments:
Post a Comment