வியாழக்கிழமை, 10 யூலை 2008,
வன்னிக் களமுனையில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 7 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
நாயாற்று வெளிப்பகுதியிலிருந்து நேற்று புதன்கிழமை காலை 6:00 மணியளவில் ஆட்லெறி, பல்குழல் வெடிகணை, மோர்ட்டார் மற்றும் டாங்கிகளின் சூட்டாதரவுடன் பள்ளமடு நோக்கி முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர்.
இதில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கூராய் குளக்கட்டுப்பகுதியிலிருந்து நேற்று காலை 8:45 மணியளவில் சிறாட்டிக்குளம் நோக்கி பெருமெடுப்பில் முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர்.
சுமார் 5 மணிநேரம் வரை நீடித்த விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 15-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
நட்டாங்கண்டல் பகுதியை நோக்கி நேற்று முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் உக்கிர எதிர்த்தாக்குதல் நடத்தினர்.
இதில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 10-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment