Friday, 11 July 2008

இரவு நேர மீன்பிடி – அனுமதி இல்லையேல் 20,000 ரூபா கொடுப்பனவு - ஜே.வி.பி

திருகோணமலை மீனவர்களுக்கு இரவுநேர மீன்பிடியில் ஈடுபட அனுமதியளிக்க முடியாவிட்டால் 20,000 ரூபா கொடுப்பனவொன்று வழங்கப்பட வேண்டும் என ஜே.வி.பி. அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஒரு வாரத்திற்குள் இந்த கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் கிழக்கில் உள்ள அனைத்து மீனவர்களுடனும் இணைந்து பாரிய போரட்டமொன்று முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கி வரும் தொடர்ச்சியான பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எவ்வித கவனமும் செலுத்தவில்லை என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானேகே தெரிவித்துள்ளார்.

கிழக்குத் தேர்தல் காலத்தின் போது மீன்பிடி கட்டுப்பாடு சற்று தளர்த்தப்பட்ட போதிலும் பின்னர் மீண்டும் குறித்த கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: