Friday, 11 July 2008

வவுனியாவில் கிராமசேவை அதிகாரிக்கு வாள்வெட்டு மேல் சிகிச்சைக்காக அனுராதபுரம் அனுப்பி வைப்பு

வவுனியா பண்டாரிகுளத்தில் கிராம சேவை அதிகாரி ஒருவரை, வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளனர்;.

கையிலும் தலையிலும் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகிய தளையசிங்கம் சிறிகாந்தன் என்ற இந்த கிராம சேவை அதிகாரி உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். வவுனியா கூமாங்குளம் பிரதேசத்தில் இவர் கிராமசேவை அதிகாரியாகப் பணியாற்றுகின்றார்.

No comments: