அரசின் அபிவிருத்திப் பணிகளின் போது மட்டக்களப்பு மாவட்டம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் அதிக அக்கறை செலுத்தும் அரசு மட்டக்களப்பு மாவட்டத்தை கவனத்திலெடுக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இயற்கை மற்றும் சுற்றாடல் வளங்கள் அமைச்சின் குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இயற்கை மற்றும் சுற்றாடல் வளங்கள் அமைச் சர், கிழக்கு மாகாண அபிவிருத்தியில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக அங்கு சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த விகாரைகளை அமைப்பதிலுமே அதிக அக்கறை காட்டி வருகின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப் பகுதி மக்கள் யானைகளின் தொல்லையால் தொடர்ந்தும் அவதிப்படுகின்றனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கும் அதிகாரிகளுக்கும் பலமுறை முறையிட்டும் எவ்வித பிரயோசனமுமில்லை. எனவே, முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு திணைக்களமொன்றை அமைக்க வேண்டும். அதற்கு தனியான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் பல தடவைகள் இடம்பெயர்ந்து கஷ்டப்பட்டவர்கள். இப்போது மீண்டும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். ஆனால், யானைகள் இந்த விவசாய செய்கைகளை அழித்துவிடுகின்றன. எனவே, இது தொடர்பில் அமைச்சர் நடவடிக்கையெடுக்க வேண்டும்.
* சாடுகிறார் கனகசபை எம்.பி.
Saturday, 12 July 2008
சுற்றாடல் அமைச்சர் கிழக்கு அபிவிருத்தியில் அக்கறை காட்டுவதற்கு பதிலாக சிங்கள குடியேற்றத்திலேயே கரிசனை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment