Friday, 11 July 2008

சாத்தான் வேதம் ஓதுகின்றது--தமிழ்மக்கள் ஒன்றியம். மட்டக்களப்பு மாவட்டம்.

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யப்போவதாகவும் தான் இருந்திருந்தால் மாகாணசபை தேர்தலில் கூடுதலான வாக்குகளை பெற்றிருப்பாராம் என்றும் கருணா என்ற சாத்தான் வேதம் ஓதுகின்றது.


நீயார். நீ இன்னும் உனது மமதையிலிருந்து மாறவில்லைபோல் தெரிகின்றது. விடுதலைப்புலிகளுடன் இருந்த கருணா வேறு இப்போ கொள்ளைக்காரனாக கொலைகாரனாக கடத்தல்காரனாக இருக்கும் கருணாவேறு என்பதை கிழக்கு மாகாண மக்கள் மறந்துவிடவில்லை.

கிழக்கு மாகாண மக்களின் கோடிக்கணக்கான பணத்தை உன் மனைவி பிள்ளைகளின் சுகபோக வாழ்விற்காக பெட்டியில் அடைத்து வாகனத்தில் ஏற்றியபோது அதைக்கண்டு ஏனைய போராளிகளிடம் கூறியதற்காக அந்த வீரனை சயனைட் கொடுத்து துடிக்கத் துடிக்க கொண்டாயே நீயா கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யப்போகின்றாய்

வெளிநாடுகளால் வழங்கப்படும் பெருந்தொகைப் பணத்தை தனது தேவைக்கு பயன்படுத்தி விட்டு எதோசாட்டுக்கு கொஞ்சத்தொகையை சிங்கள அரசு அபிவிருத்தி என்ற போர்வையில் தருகின்றது. அந்த பணத்தை சுருட்டலாம் என்றுதானே மீண்டும் இங்கு வந்துவிட்டாய்.

சிங்கள அரசுக்கு அடிமையாகி ஏவல் நாயாய் இருக்கும் உன்னால் எப்படி கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யமுடியும்? முதலில் உனது வங்கி கணக்குகளில் இருக்கும் கோடிக்கணக்கான பணத்தை எடுத்து கிழக்கு மாகாண மக்களுக்காகச் செலவு செய். மானமும் ரோசமும் இருந்தால் மகிந்த அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்ட ராஜபத்திரண மாவத்தையை வேப்பவெட்டுவானாக மாற்றிக்காட்டு அதன் பின் அபிவிருத்திபற்றிப்பேசு.

விடுதலை உணர்வுப் பெற்று சிங்கள வெறியர்களுக்கு எதிராக போராடி உன்னையும் இந்த மண்ணையும் பாதுகாப்பதற்காக வீரகாவியமான மூவாயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்கள் கல்லறைகளில் துயிலும் இல்லங்களுக்கும் உறங்கி கொண்டிருந்த அந்த அற்புதமானவர்களின் கல்லறைகளை சிங்கள இராணுவம் உடைத்தபோது உன் கிழக்கு மாகாணப் பற்று எங்கே போனது. சிலவேளைகளில் கல்லறைகளுக்குள் காசு புதைக்கப்பட்டு இருந்தால் ஒருவேளை உன் கிழக்கு மாகாணப் பற்று கிழர்ந்து எழுந்திருக்குமோ?
கண்டலடி, தரவை, தாண்டியடி, மாவடிமுன்மாரி ஆகிய துயிலும் இல்லங்களும் நீ அபிவிருத்தி செய்ய துடிக்கும் கிழக்கு மாகாணத்தில்தானே இருக்கின்றது. அங்கு போய் உன்னால் கால்வைக்கமுடியுமா? உன் கட்டளை கேட்டு போராடி வீரமரணம் அடைந்த லெப்.கேணல் ஜீவன், நிசாம் போன்றவர்களின் நினைவுச்சின்னங்களை உடைத்து சிங்களவெறியர்கள் சின்னாபின்னாப்டுத்தியபோது உன் கிழக்கு மாகாணப் பற்று எங்கே போனது?

கிழக்கில் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் குடிம்பிமலையிலே குடியிருந்த பிள்ளையாரை துக்கி எறிந்துவிட்டு புத்தர்சிலையை மகிந்த அரசின் கூலிப்படைகள் வைத்தபோது உன் கிழக்கு மாகாணப் பற்று எங்கே போனது?

கிழக்கு மாகாண மக்களையெல்லாம் கொடுமையாக வெளியேற்றிவிட்டு வீடுகளை கோயில்களை உடைத்து அவர்களின் உடைமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஆடு மாடுகளையும் சிங்கள வெறியர்கள் வாகனங்களில் ஏற்றிச்சென்றபோது உன் கிழக்கு மாகாணப் பற்று எங்கே போனது?

பன்டியுடன் சேர்ந்த நாயும் எதையோ தின்னும் என்பது போல நீயும் அதைத்தான் செய்வாய். உன்னால் உன்னையும் உனது குடும்பத்தையும் தவிர கிழக்கு மாகாணத்தை ஒருபோதும் அபிவிருத்தி செய்முடியாது.

கிழக்கு மாகாண மக்கள் உன் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கப்போவதில்லை நீயும் உனது கூட்டமும் சிங்கள படையும் இல்லாமல் விட்டலே கிழக்கு மாகாணம் தானாகவே அபிவிருத்தி அடையும்.

அர்ப்பணிப்போடு போராடும் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள் அவர்கள் எங்கள் பிள்ளைகள் அவர்கள் கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வார்கள். நீயும் உன் கூட்டமும் எங்கள் நிம்மதியான வாழ்வை குலைக்காமல் விட்டாலே போதும்.

No comments: