Saturday, 26 July 2008

துணுக்காயில் வல்வளைப்பு முயற்சி முறியடிப்பு: 25 படையினர் பலி- 40 பேர் படுகாயம்

ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008,

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய் கல்விளான் நகரை வல்வளைப்புச்செய்யும் நோக்கிலான சிறிலங்காப் படையினரின் படை நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25 படையினர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். படைப் பொருட்கள் உட்பட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

துணுக்காயில் உள்ள கல்விளான் நகரை நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு வல்வளைப்புச் செய்யும் நோக்கில் செறிவான ஆட்டிலெறி, மோட்டார் எறிகணைகள் மற்றும் பல்குழல் வெடிகணைகளின் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வினை சிறிலங்கா தரைப்படையின் 57 ஆவது டிவிசன் படையினர் மற்றும் கொமாண்டோக்கள் மேற்கொண்டனர்.

இதற்கு எதிரான முன்நகர்வு நடவடிக்கை முறியடிப்புத்தாக்குதல் விடுதலைப் புலிகளால் குட்டிமூலையில் மேற்கொள்ளப்பட்டது.

படையினரின் தாக்குதலுக்கு ஒத்துழைப்பாக சிறிலங்கா வான்படையின் வானூர்திகளும் தாக்குதலை நடத்தின.

படையினரின் இப்பாரிய தாக்குதல் நடவடிக்கை நேற்று முன்நாள் மாலை 6:30 மணியளவில் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இதில், படையினர் பாரிய இழப்புக்களுடன் தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கி ஓடினர்.

விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் 25 படையினர் கொல்லப்பட்டனர். 40 படையினர் படுகாயமடைந்தனர்.

படைப் பொருட்கள் உட்பட படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ன.

இம்முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட படைப்பொருட்கள் விவரம்:

ஆர்.பி.ஜி செலுத்தி - 01
பி.கே.எல்எம்ஜி துப்பாக்கி - 01
ரி-56-02 ரக துப்பாக்கிகள் - 03 மற்றும்
பெருமளவான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments: