நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுமாறு ஐக்கிய தேசிய கட்சியினர் கே.என்.சொக்சிக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான கே.என். சொக்சியை உறுப்பினர் பதவியில் இருந்து விலகச் செய்து, எஸ்.பி.திசாநாயக்கவை அந்த பதவியில் அமர்த்துவது என ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை தீர்மானம் மேற்கொண்டது.
இந்த நிலையில் அவரை பதவியில் இருந்து விலகுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்கவை தற்காலிகமாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும் என அந்த கட்சியின் அரசியல் சபை கூட்டத்தில் ஜோன் அமரதுங்க யோசனை ஒன்றை முன்வைத்ததுடன்,
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அதனை ஆமோதித்திருந்தார். அரசியல் சபையின் தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சொக்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கட்சியின் உயர்மட்டத்தலைவர்கள் உறுதியளித்த போதிலும்,
பதவியில் இருந்து விலகுமாறு சொக்சிக்கு மறைமுகமாக அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Saturday, 26 July 2008
S.B திசாநாயக்கவை நாடாளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சி தொடர்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment