தவறான பத்திரங்களை காட்டி 10 மாதங்களாக சிறீலங்கன் விமானத்தை ஓட்டிய விமானியொருவரைக் கைதுசெய்ய இருப்பதாக போலீஸ் துறை பேச்சாளரான ரஞ்ஜித் குணசேகர தெரிவித்தார்.
குறிப்பிட்ட நபர் போலியான பத்திரங்களை ஒப்படைத்து விமானியாக 10 மாதங்கள் பணியாற்றியுள்ளார்
எனும் புகார் கிடைக்கப்பெற்றதையடுத்தே அவரைக் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக ரஞ்ஜித் குணசேகர மேலும் தெரிவித்தார்.
எது எப்படியானாலும் அந்த நபர் விமானத்தை ஓட்டிய காலப்பகுதியில் அவரால் எதுவித பிரச்சனையும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment