சிங்களப்படைகளின் பாதுகாப்புக்களுடன் ஈபிடிபி ஒட்டுக்குழுவினர் தமது தினமுரசு பத்திரிகையினை விற்பனை செய்யும் நடவடிக்கை கிழக்கில் பாரியளவில் நடைபெற்று வருகின்றன.
வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு அருகில் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு செல்லும் பேரூந்துக்களை சோதனை நடவடக்கையின் பாணியில் நிறுத்தி பத்திரிகைகளை மக்கள் கைகளில் திணித்து பணத்தினை அறவிடுகின்றனர்.
அதே போன்று காலை வேளைகளில் அவசர அவசரமாக பல்வேறு பட்ட தேவைகளுக்காக செல்லும் மக்களை கல்லடி வாகை மரத்தடிக்கு முன்பாக உள்ள பிரதான வீதிக்கு குறுக்கு நின்று பலாத்காரமாக நிறுத்தி பத்திரிகைகளை எடுக்கும்படி மிரட்டல் பாணியில் கூறுகின்றனர்.
மட்டக்களப்பு நகருக்குச் செல்லும் அந்த வீதியால் தேவை நிமிர்த்தம் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பயணித்த அப்பாவிகள் சிலர் பீதியின் நிமிர்த்தம் ஒன்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகளை நாளொன்றில் கொள்வனவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டும் உள்ளனர்.
No comments:
Post a Comment