அமெரிக்க அதிபருக்குப் போட்டியிடும் பராக் ஒபாமா தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உள்ளகப் புனலாய்வு பிரிவான எவ்.பி.ஐ தமிழீழ விடுதலை புலிகள் மிக மோசமான பயங்கரவாத அமைப்பு எனக் கூறியிருந்த போதும் பராக் ஒபாமா விடுதலைப் புலிகள் தொடர்பில் மௌனம் சாதித்து வருகிறார்.
கடந்த வாரம் பேர்லினிக்கு வருகை தந்த ஒபாமா தலிபான் மற்றும் அல்கொய்தா அமைப்புகளின் பயங்கரவாதத்தை நாங்கள் தோற்கடிக்க வேண்டும் என கூறியிருந்தார். கடந்த சனவரி மாதம் இலங்கையில் இன முரண்பாடு தொடர்பில் கருத்துத் ஒபாமா கருத்துத் தெரிவிக்கையில், சிறீலங்காவில் மக்கள் இயல்பு வாழ்வு வாழக்கூடிய சூழ்நிலை அங்கு என்றும,; நாங்கள் இங்கே வாழ்வது போன்று அவர்கள் அங்கு இல்லை. இலங்கையில் யுத்தத்தின் கொடூரத்தை எல்லா மக்களில் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment