கருணாவின் தலைமையில் இயங்கும் துணைப்படையை ராணுவத்தில் அல்லது பொலிஸ் படையில் சேர்த்துக்கொள்ளும்படி கருணாவால் விடப்பட்டகோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் இது துணைப்படையை ஊர்காவல் படையை ஒத்த சிவில் பாதுகாப்பு படையில் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கிராமங்கள் தோறும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள்.இதன் முதற்கட்டமாக 1000 பேரை இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படின் ராணுவத்துக்கு உதவியாகவும் இவர்கள் செயற்படுவார்கள் என சொல்லப்படுகிறது.
இத்துணைப்படையை இலங்கையின் எந்தவொரு படைப்பிரிவிலும் இணைப்பதற்கு மூத்த அதிகாரிகள் விரும்பவில்லையென்றும் இவர்கள் முன்னர் புலிகள் அமைப்பில் இருந்ததினால் இவ்வாய்ப்பினைப்பயன்படுத்தி புலிகள் சிறீலங்காவின் படைப்பிரிவிற்குள் ஊடுருவக்கூடிய அபாயமும் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
அதுவுமல்லாமல் கருணா குழுவுக்குள் இன்னமும் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் இருப்பதால் ஓரளவுக்கு மிஞ்சி அதிகாரங்களை வழங்குவதும் ஆபத்து என சிறீலங்கா புலனாய்வு வட்டாரங்கள் எச்சரித்துள்ளதாகவும் தெரியவருகிற்து.
Saturday, 26 July 2008
தற்போதய கருணா,பிள்ளையான் குளு இனி சிவில் பாதுகாப்பு படையாக மட்டுமே செயற்பட தகுதி உடையது - பொலிஸ்,ராணுவத்தில் இடம் கிடையாது??
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment