Friday, 11 July 2008

எம்பிலிபிட்டியவில் சிறிய நிலநடுக்கம்


ரத்தினபுரி எம்பிலிபிட்டியவில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 7.10 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலஅதிர்வின் காரணமாக எவ்வித சேதங்களும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வளிமண்டளவியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தின் அளவு அல்லது அதன் தன்மை பற்றியோ இதுவரையில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

No comments: