Saturday, 12 July 2008

ஆயிரம் இந்திய ராணுவம் இம் மாதம் 20 ம் தேதி செவ்வாய் கிழமை கொழும்புக்கு வந்திறங்க தயாராக உள்ளது

தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமமந்திரிக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் இலங்கையில் பிரவேசிக்க உள்ள படையின் முதலாம் பிரிவு எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று செல்லவுள்ளதாக இன்றைய லக்பிம ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமருக்கும் அந்த நாட்டின் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பளிக்கவென சுமார் மூவாயிரம் இந்திய துருப்புகள் இலங்கை செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று சுமார் 1000 துருப்பினர் இலங்கைக்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் கட்டத்துருப்பினர் எதிர்வரும் யூலை 20 ஆம் திகதி இலங்கைக்கு செல்வர்;. இறுதி கட்ட துருப்பினர் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு இந்திய போர்;க்ப்பலின் மூலம் பிரவேசிக்க உள்ளனர்.

இதனையடுத்து கொழும்பின் ஐந்து நட்சத்திர விருந்தகங்கள் இரண்டின் அறைகள் முழுமையாக இந்திய படையினருக்காக இரண்டு வாரங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு இந்திய துருப்பினரை ஏற்றி செல்லும்; கப்பல், இந்தியர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குண்டுத்துளைக்காத வாகனங்கள் மற்றும் உலங்குவானூர்திகளும் இந்தியர்களுக்காக இந்தியாவில் இருந்தே கொண்டு செல்லப்படவுள்ளன. இதற்கிடையி;ல் சார்க் மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தானிய பிரதமருக்கு பாதுகாப்புக்காக அந்த நாட்டின் சுமார் 500 படையினர் வரை இலங்கைக்கு செல்லவுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிய தலைவருக்காக சுமார் 100 ஆப்கானிஸ்தானிய படையினர் இலங்கையில் தரையிறங்க உள்ளனர். எனினும் ஏற்கனவே வெளியாகிய இந்தத் தகவல்களை அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா மறுத்திருந்தார். வெளிநாட்டு படைகள் இலங்கையில் தரையிறங்க மாட்டார்கள் என உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: