- பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய நாடுகள் விவகாரம் தொடர்பா ன இராஜாங்க அமைச்சர் எமலோக் பிறவுன் நாளை திங்கட்கிழமை இலங்கை வருகின்றார். எதிர்வரும் 17ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.
இவ்விஜயத்தின் போது இவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளையும் சந்திக்கவுள் ளார்.
கிழக்கு மாகாணத்திற்கும் இவர் விஜயம் செய்து அங்கு இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் ஆராயவுள்ளதோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திர காந்தனையும் சந்திக்கவுள்ளதாகத் தெரியவருகின்றது.
இவரது இவ்விஜயத்திற்கு முன்னோடியாக பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதுவர் நிஹால் ஜயசிங்க, இராஜாங்க அமைச்சர் எமலோக் பிறவுனை சந்தித்து இலங்கை விஜயம் தொடர்பாக கேட்டறிந்துள்ளதுடன்
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலமைகள் குறித்தும் அவருக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கையின் ஆடைத் தொழிற்துறைக்கு பெற்றுக் கொடுத்துள்ள ஜீ.எஸ்.பி. பிளஸ் மானியம் குறித்தும் இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு சம்பந்தமாகவும் இச்சந்திப்பின் போது பிரித்தானிய இவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
அரசு சார்பற்ற நிறுவனங்கள் சுட்டிக்காட்டுவது போன்று பாரிய மனித உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெறவில்லை என்பதையும் இலங்கைத் தூதுவர் அவருக்கு கூறியுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, இலங்கையின் கிராமிய பிரதேசங்களில் ஆங்கில கல்வியறிவை வழங்குவதற்காக எதிர்வரும் காலங்களிலும் இலங்கைக்கு உதவ பிரித்தானியா தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் இலங்கைத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
Saturday, 12 July 2008
பிரித்தானிய அமைச்சர் நாளை வருகிறார் கிழக்கு நிலைமையை நேரில் ஆராய்வார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment