Monday, 21 July 2008

21 வருடங்களுக்குப் பின்னர் லொத்தர் சீட்டின் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்படவுள்ளது

சுமார் 21 வருடங்களின் பின்னர் லொத்தர் சீட்டுக்களின் விலையை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய லொத்தர் சபை அறிவித்துள்ளது.

இதன்படி இதுவரை காலமும் 10 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த லொத்தர் சீட்டொன்றின் புதிய விலை 20 ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி முதல் இந்த புதிய விலை மாற்றம் அமுலுக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: