Saturday, 12 July 2008

சார்க் மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்காக 2880180332 ரூபாய்கள் செலவு!!!

சார்க் மாநாட்டில் பங்கேற்கும் ஏனைய நாட்டு தலைவர்களுக்காக இலங்கை அரசாங்கம் 12 குண்டுத்துளைக்காத கார்களையும் பி எம் டபில்யூ பாதுகாப்பு மோட்டார் சைக்கிள்களையும் இறக்குமதி செய்யவுள்ளது. இவற்றுக்காக சுமார் 960 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவுள்ளன.

இதேவேளை ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகம் சுமார் 31 கார்களை 8.6 மில்லியன் அமரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளது.

12 கார்கள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படையினரின் நிதிஒதுக்கீட்டின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.


இதேவேளை இறக்குமதி செய்யப்படும் 31 கார்கள் ஜனாதிபதியின் ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன உட்பட்டோரின் பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


இதுமட்டுமன்றி “சார்க்” மாநாட்டின் போது சுமார் 56 மில்லியன் ரூபாய்கள் கேளிக்கைகளுக்காகவும் செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த மாநாட்டிற்கான முழுச்செலவு 2800 மில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.கேளிக்கைகளுக்கான 56 மில்லியன் ரூபாய்களும் தலைவர்கள் உட்பட 1405 பேருக்காக செலவிடப்படவுள்ளன.

சிலவேளைகளில் இந்தச் செலவு மேலும் 15 மில்லியன்களால் அதிகரிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை எதிர்வரும் சார்க் மாநாட்டுக்கான செலவு மதிப்பீட்டு அறிக்கையை அரசாங்கம் கடந்த 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இதன்படி செலவுகள் 401881.272 ரூபாய்களாகும். மூலதனச் செலவுகள் 2478299069 ரூபாய்களாகும்.

இதன்படி மாநாட்டுக்கான மொத்த செலவுகள் 2880180332 ரூபாய்கள் ஆகும். இதில் அரசாங்கம் தலைவர்களுக்கான அன்பளிப்புகளுக்காக 1200000 ரூபாய்கள் செலவிடப்படவுள்ளன.

இதேவேளை நாட்டின் பொருளதாரம் பாரிய பள்ளத்தாக்கிற்குச் சென்று கொண்டிருக்கையில் இந்த மாநாடு வீண்விரயமாக அமைந்துள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என் ஸ்ரீகாந்தா நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்

.இந்த மாநாடு நடத்தப்படுவதன் பாதிப்பை மக்கள் எதிர்காலத்தில் உணர்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments: