Saturday, 12 July 2008

கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்தவேளை 2 பெண்களின் தாலிக்கொடிகள் அபகரிப்பு

*பட்டப்பகலில் கொட்டாஞ்சேனையில் சம்பவம்

கொட்டாஞ்சேனை ஸ்ரீ சிவானந்தா வீதியில் உள்ள கருமாரியம்மன் ஆலயத்தின் முன்பாக நின்று வழிபட்டுக் கொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி ஆட்டோவில் வந்த மூவரால் அறுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

பலர் அவ்விடத்தில் நின்று வழிபட்டபோது திடீரென ஆட்டோவில் வந்த இவர்கள் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறித்தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ சிவானந்தா வீதியில் அடிக்கடி வழிப்பறிச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல, வெள்ளிக்கிழமை பகல் 1.30 மணியளவில் கொட்டாஞ்சேனை சுமித்திரா மாவத்தையில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் தாலிக்கொடியும் ஆட்டோவில் வந்தவர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் பலர் பார்த்துக் கொண்டிருக்கையில் இவ்விரு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான இடங்களில் தங்க நகைகளை அணிந்து கொண்டு செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: