Saturday, 12 July 2008

ஜேர்மன் போலி விஸா தமிழ் இளைஞருக்கு பிணை

போலி விஸா மூலம் ஜேர்மனிக்கு செல்ல முயன்றதாக குடியகல்வு சட்ட விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பருத்தித்துறையைச் சேர்ந்த எஸ்.ஜெயதீசன் என்ற இளைஞனை 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும், 3 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்வதற்கு நீர்கொழும்பு நீதிவான் ஜெயகிடி அல்விஸ் அனுமதி வழங்கினார்.

ஜூன் 6 ஆம் திகதி இவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணம் செய்ய வந்தபோது இவரின் கடவுச் சீட்டை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் பரிசீலித்தபோது அதில் விஸா மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இவர் குற்றப் புலனாய்வு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவருக்கு எதிராக குடியகல்வோர் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு செல்ல முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

No comments: