Monday, 7 July 2008

ரம்புட்டான் விதை சிக்கி 2 வயது சிறுவன் உயிரிழப்பு

இரண்டு வயது சிறுவனின் தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கியதால் அந்தச் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நாவலப்பிட்டி சொய்சாகலையில் இடம்பெற்றுள்ளது.

ரம்புட்டான் பழத்தைச் சுவைத்துக் கொண்டிருந்த குறிப்பிட்ட சிறுவனின் தொண்டையில் ரம்புட்டான் விதை சிக்கிக் கொண்டதால் உடனடியாக அந்தச் சிறுவனை பெற்றோர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கு வழங்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் உடனடியாக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சத்திர சிகிச்சைக்கு முன்பதாகவே சிறுவனின் உயிர் பரிதாபகரமாக பிரிந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: