Tuesday, 8 July 2008

ஜே.வி.பி. 2 காரியாலங்கள் மீது தாக்குதல்

வடமத்திய மாகாணத்தில் இரண்டு ஜே.வி.பி. காரியாலங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

ஜே.வி.பி.யின் வடமத்திய மாகாணசபை வேட்பாளர் எஸ்.திலக்கசிறியின் கலென் பிந்துனுவௌ கட்சிக் காரியாலயம் இன்று அதிகாலை 4 மணியளவில் தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தினால் பிரசார சுவரொட்டிகள் மற்றும் உபகரணங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகத் திலக்கசிறி தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவின் ஆதரவாளர்கள் குறித்த காரியாலயத்தை அழிப்பதற்கு தயாராவதாக கூட்டமைப்பின் வேட்பாளரும், எஸ்.எம். சந்திரசேனவின் சகோதரர் எஸ்.எம். ரஞ்சித்தின் ஆதரவாளர் ஒருவர் தொலைபேசி மூலம் தமக்கு அறிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக கலென் பிந்துனுவௌ பிரதேச பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றிரவு 11.30அளவில் அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஜே.வி.பி. காரியாலத்திற்கு புகுந்து கட்சி ஆதரவாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை வானில் வந்த கும்பலே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரத்தில் கூட்டமைப்பு மாத்திரமே அரசியலில் ஈடுபட வேண்டும் எனவும் ஏனையவர்கள் தலையீடு செய்யக் கூடாது எனவும் குறித்த குழுவினர் மீண்டுமொருமுறை வந்து அச்சுறுத்தல் விடுத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments: