Tuesday, 8 July 2008

பாதுகாப்பை குத்தகைக்கு எடுக்கும் இந்தியா!!!

இலங்கை தீவின் ஒரு நாள் பாதுகாப்பை குத்தகைக்கெடுக்கும் இந்தியா தனது பிராந்திய வல்லரசின் ஆதிக்கத்தை, வெளியுலகிற்கு காட்ட இது ஓர் அரிய சந்தர்ப்பமாக பயன்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதிக்கு கூட இல்லாத அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போது மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்படுவதும் உலகில் மிகவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த பிரதமராக இவரை காட்டும் இவர்களின் ஆரவாரம் சற்று அளவிற்கு அதிகமான பில்டப் தான்.. இருப்பினும் எல்லாவிடயங்களிலும் மூக்கை நுளைக்கும் J.V.P இன் மெளனம் இந்த விடயதில் பல புதிர்கள் இருப்பதை நமக்கு உணர்த்தினிற்கின்றது.

இலங்கையின் வேண்டுகோளிற்கு இணங்கவே இங்தியா தனது படைகளை பாதுகாப்பிற்கு அனுப்ப உள்ளதாக விடையம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடக்கவிருக்கும் சார்க் மநாட்டிற்காக இலங்கை அரசு வடக்கிலிருந்தோ அல்லது கிழக்கிலிருந்தோ மேலதிக துருப்புக்களை தெற்கிற்கு கொண்டுவரும் நிலை காணப்பட்டது.

அவ்வாறு இலங்கை அரசு படைகளை நகர்த்தினால் எற்படும் வெற்றிடப் பகுதியை புலிகள் தாக்கி, ஊடறுத்து முன்னேறும் திட்டம் இருப்பதாக இரானுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதையடுத்தே இலங்கை அரசு இந்தியாவுடன் இந்த இரகசிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு பாதுகாப்பு பொறுப்பை இந்தியாவிடம் கையளிப்பது என்று உறுதி செய்யப்பட்டது.

இதனை ஜனாதிபதி, J.V.P கும் அறியப்படுத்தி இருந்ததினால் தனது வாலை சுருட்டிக் கொண்டு J.V.P இப்போது இருப்பதையும் நாம் கானலாம். ...

No comments: