Tuesday, 8 July 2008

புத்தளத்தில்,வவுனியாவில் தலா ஒருவர் கடத்தல்

வவுனியா தோணிக்கல் ......

அம்மன்நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய வரதராஜா கணேசமூர்த்தி என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆயுதமேந்தியவர்களினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினம் இரவு 10.30 மணியளவில் தமது வீட்டிற்கு வந்த ஆயுதந்தாங்கிய நபர்கள் தனது கணவனைப் பெயர் கூறி அழைத்ததாகவும், கதவு திறந்ததும்

அவரைப் பிடித்து இழுத்துச் சென்றதாகவும், தாங்கள் கூக்குரலிட முயன்றபோது துப்பாக்கி முனையில் சத்தம் போட வேண்டாம் என பயமுறுத்திவிட்டு கணவனைக் கொண்டு சென்றுவிட்டதாகவும் கடத்தப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக வவுனியாவி;ல் உள்ள சர்வதேச செஞ்சிலுவைக்குழு அலுவலகம், மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் என்பவற்றிலும் முறையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் சின்னநாகவில்லு அகதிகள் முகாமயில் .......

வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கதிர்காமர் விக்னேஸ்வரர் என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என புத்தளம் பொலிஸில் முøற்பபாடு செய்யப்பட்டுள்ளது

No comments: