Tuesday, 8 July 2008

அரச படைகளின் கட்டுப்பாட்டில் விரைவில் கிளிநொச்சியில் அரச அலுவலகங்கள் திறக்கப்படும் - சம்பிக்க ரணவக்க.

சூழல் அதிகாரசபை திணைக்களத்தின் அலுவலகம் உட்பட அரசாங்கத்தின் புதிய அலுவலகங்கள் பல வெகுவிரைவில் கிளிநொச்சியிலும் நிறுவப்படும் எனவும்

அரச படையினர் விரைவிலேயே இந்தப்பகுதிகளை மீட்டுவிடுவர் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் சூழல் மற்றும் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் கந்தளாயில் சூழல் அதிகார சபையின் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் நேற்று அவர் கலந்துகொண்டிருந்தார்.

இந்த விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் (பிள்ளையான்) கலந்துகொண்டிருந்தார்.

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க,
முன்னர் விடுதலைப்புலி உறுப்பினராக ஆயுதங்கள் தரித்து அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்தான் பிள்ளையான்,

எனினும் அவர் தமது அன்றைய கொள்கை தவறு என உணர்ந்து அரசாங்கத்திடம் சரணடைந்து இன்று அரசியல் ஜனநாயக வழியிலே தமது மக்களுக்கு சேவையாற்றிவருகின்றார்.???

இதேபோல விடுதலைப்புலிகளின் ஏனைய தலைவர்களும் தமது ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு அரசாங்கத்திடம் சரணடைவார்களே ஆனால் அவர்களையும் தமது மக்களுக்கு உரிய வழியில் சேவை செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments: