இலங்கையின் கரையோரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தெஹிவளை மற்றும் நீர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த மீனவப் படகுகள் கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் சிலர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மேலும், கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடுங் காற்று வீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மீனவர்கள் கடலுக்குச் செல்வது ஆபத்தாகலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:
Post a Comment