உலகின் முதலாவது மாடுகள் சரணாலயம் அம்பிலிபிட்டியவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி போதிராஜா அமைப்பினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இறைச்சிக்காக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மற்றும் நிர்க்கதியான நிலையில் காணப்படும் 150 மாடுகள் இந்த சரணாலயத்தில் பாதுகாக்கப்படவுள்ளது.
மாட்டிறைச்சி சாப்பிடுதல் மற்றும் மாடுகளை கொலை செய்தல் சிங்கள மக்களின் துர்நடத்தைகளுக்கு ஏதுவாக அமைந்துள்ளதென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் இந்த பாவச் செயலிலிருந்து சிங்கள மக்களை மீட்டெடுப்பதற்காக இந்த புதிய மாடுகள் சரணாலயம் அமைக்கப்படவுள்ளதாக லக்பிம நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த சுமார் 1400 பசு மாடுகளை மீட்டெடுத்து ஏழைக் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment